ஒருத்தருக்கும் ஒன்றும் ஆகவில்லை: சீன மாணவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு..!!

6 days agoசீனாவை தாயகமாக கொண்ட Ke 'jaden' xu, Yue liu மற்றும் Juanwen Zhang ஆகிய மூவரும் காணாமல் போன நிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் டொரண்டோ பொலிசார் மீட்டுள்ளனர்.

கனடாவில் படிக்கும் மூன்று சீன மாணவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பல் அச்சுறுத்தல் விடுத்த நிலையிலேயே இவ்வாறு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது சர்வதேச கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கலாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர். மேலும் மூவரையும் கடத்துவதற்கு முன்பாக எச்சரிக்கை அழைப்பு ஒன்று மாணவர்களுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதில், நீங்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ளுங்கள், தொலைபேசி, சமூகவலைத்தளம், இணையத்தை பயன்படுத்தக்கூடாது, உங்கள் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ளக்கூடாது, மீறினால் சீனாவில் வசிக்கும் உங்கள் குடும்பத்தினரை துன்புறுத்துவோம் என மிரட்டியுள்ளனர்.

மாணவர்களை கடத்தியபின்னர், அவர்களது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு பணம் பறிக்க முயல்வதே கடத்தல்காரர்களின் திட்டம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
GET UPDATES