வவுனியாவில் 'மகிழ்வோர் மன்றம்' முதியோர் தின நிகழ்வு

6 days agoவவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து வழங்கும் 'மகிழ்வோர் மன்றம்' என்னும் தொனிப் பொருளில் முதியோர் தின விழா வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன் தலமையில் இடம்பெற்றது.

இன்று (14) காலை 7.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது பேருந்துகளில் முதியோர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன் முதியோரின் உரிமைகள், அவர்களுக்கான கௌரவம், சமூக மதிப்பு என்பவற்றை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

இவ்வூர்வலம், பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து மணிக்கூட்டு சந்தியூடாக வந்து நகரசபை வீதியூடாக நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. ரோஹண புஷ்பகுமார, வவுனியா வடக்கு பரந்தாமன், வெண்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கே. சிவகரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தம், மாகாண விவசாயப் பணிப்பாளர், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள், வவுனியா தொழிநூட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்கள், வவுனியா இலங்கை உயர் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள், வவுனியா தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மாணவர்கள், வவுனியா பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் , முதியவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

GET UPDATES