எந்த நேரத்திலும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் தாக்கப்படலாம்: கிளம்பியிருக்கும் பூதம்..!!

6 days agoசமீபத்தில் டொனால்டு டிரம்ப் மன நிலை பாதிக்கப்பட்டவர் என வடகொரியா கருத்து வெளியிட்டிருந்தது. தற்போதைய சூழலில் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை முதற்கொண்டு அனைத்து விதமான வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக கூறும் அமெரிக்கா, இருப்பினும் பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தும் கடிதத்தை சிறப்பு அதிகாரி ஒருவர் ரஷ்யாவுக்கு நேரிடையாக சென்று அளித்துள்ளதாக குறப்படுகிறது.

இதனையடுத்தே ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புதின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்கு முயற்சிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த கடிதத்தை ரஷ்யாவின் மேல்சபை தலைவர் வாலண்டினா மாட்விங்கோ ரஷ்ய ஜனாதிபதியிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வடகொரியாவின் இந்த கடிதமானது, அமெரிக்க மீதான வடகொரிய தாக்குதலுக்கான 51 சதவிகித சாத்தியத்தை உறுதி செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
GET UPDATES