கொள்ளை அடித்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருடன் அளித்த விருந்து..?

6 days agoடெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள டோனட் உணவு கடையில் நடைபெற்ற திருட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கடைக்குள் மூன்று திருடர்கள் மூகமுடி மாட்டிக்கொண்டு நுழைகின்றனர்.

இருவர் உள்ளே சென்று லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கின்றனர்.மற்றோரு நபர் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கினார்.

அவர்களை உட்கார சொல்லி விட்டு உள்ளே சென்று டோனட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு வெளியே செல்கிறார்.திருடர்கள் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அதனை கண்ட போலீசார் ஆச்சரியத்தில் உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்துவிடுவதாக கூறினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
GET UPDATES