நிதி இல்லாததால் மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசின் செயல்பாடு..?

6 days agoநியாய விலைக் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் இனி துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்தம் பருப்பின் கொள்முதலை நிறுத்தி விட்டதாக தமிழக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். இனிமேல் கனடியன் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு என ஏதாவது ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.தமிழகத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் உள்ளன.

பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணையும், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் பாமாயிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு சரிவர வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், போராட்டங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக பொதுமக்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ரேஷன் கடைகளில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இருப்பினும் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு ரேஷன் கடைகளிலிருந்த பட்டியலில் உளுந்தம் பருப்பு இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது.கொஞ்சம் கொஞ்சமாக ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அரசு டெண்டர் விட்டு தான் உளுந்தம் பருப்பை கொண்டு வரவேண்டும்.

ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசிடம் நிதி இல்லாதது தான் இதற்கு காரணம்.ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பாமாயிலும் கூட தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குவது கிடையாது. துவரம் பருப்பும் நல்ல துவரம் பருப்பு மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக மசூர் பருப்புதான் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் ஒரு கிலோ பருப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.பலசரக்கு கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இனி இட்லி, வடை ஆகியவைகளுக்கு சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளிகடைகளில் பருப்பு வாங்கி பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே நவம்பர் 1 -ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. இதற்கே மக்கள் அனைவரும் கொதித்து போயுள்ளனர்.

இந்த நிலையில் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் உளுந்தம்பருப்பு மற்றும் துவரம் பருப்பிலும் அரசு கை வைத்து விட்டது. ஒரேடியாக இனிமேல் ரேஷன் கடைகளை மூடும் நடவடிக்கையா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
GET UPDATES