பாகுபலியாக நினைத்த வாலிபருக்கு பலியாகும் அதிர்ச்சி கொடுத்த யானை..!!

6 days agoகேரளாவில் தொடுபுழாவை சேர்ந்த தொழிலாளி சாஜி (வயது 40) என்பவர் அங்கு வந்தார். யானை மரத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அவர், ‘பாகுபலி’ படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போன்று அவரும் ஏற நினைத்தார்.

இதற்காக யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை யானையும் வாங்கியது. பின்னர் நைசாக யானையின் அருகில் சென்ற சாஜி, தந்தங்களை பிடித்து ஏற முயன்றார்.

அந்தவேளையில், யானை மிரண்டு அவரை தூக்கி வீசியது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். மேலும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே யானையின் மீது சாஜி ஏற முயன்றதையும், அப்போது யானை தூக்கி வீசுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து ‘வாட்ஸ் அப்’, முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.
GET UPDATES