அதிகாரிகளிடம் சிக்கிய முக்கிய ஆவணம் : பல ஆயிரம் கோடியின் ரகசியம் அதில் தான் இருக்கிறதாம்!!

6 days agoகடந்த சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வாக்காளருக்கு ரூ.4000/- வரை என்று வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக நடைபெறும் சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயா டி.வியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மிடாஸ் மது ஆலை, கோடநாடு எஸ்டேட், கிருஷ்ணபிரியா மற்றும் விவேக் ஜெயராமனின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய தீவிர சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலும் ஜெயா டி.வி. அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் சோதனையில் சிக்கிய ஆவணங்களை மதிப்பிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நடைபெற்று வரும் சோதனையில், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்க, 234 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ரூ.5000 கோடி வரை விநியோகம் செய்ததை நிரூபிக்கும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
GET UPDATES