நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!

6 days agoகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று காலை குறித்த இளைஞன் 11 நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும், முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மாலை கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், இராணுவத்தினரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான விரோஜனபண்டார என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

GET UPDATES