பள்ளி மாணவனை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள்! பொதுமக்கள் அதிர்ச்சி!

6 days agoவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜோன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவரது மகன் கோவிந்தன் (வயது13).கோவிந்தன் திருப்பத்தூர் வெங்களா புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவன் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.நேதாஜிநகர் என்ற இடத்தை கடக்கும் போது அவனை 2 பேர் மடக்கினர். கோவிந்தனை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாந்தோப்புக்குக்குள் சென்றனர்.

கோவிந்தனை கடுமையாக தாக்கி தரையில் சாய்த்தனர். மேலும் பெட்ரோலை அவனது உடலில் ஊற்றி தீவைத்தனர். உடல் முழுவதும் தீ மலமலவென பரவியதால் கோவிந்தன் வலியால் துடித்து கூச்சலிட்டார்.

அவனது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனைக் கண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதனை அடுத்து அவனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து, மாணவனை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பள்ளி மாணவன் ஒருவனை உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் தாலுகா போலீசார் மாணவன் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மாணவன் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

முன்விரோத தகராறில் எரிக்கப்பட்டாரா? அல்லது பள்ளியில் வேறு ஏதாவது தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும்,தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
GET UPDATES