தமிழகத்தில் அடுத்த கைது..? கிசுகிசு பாணியில் வி....க் & கி...ண...பி..யா..!!

6 days agoதமிழகத்தில் ஒரே நேரத்தில் சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இதற்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும், எடப்பாடி அரசின் தூண்டுதலால் மத்திய அரசு செயல்பட்டுள்ளதாகவும் தினகரன் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், வருமான வரித்துறை தன்னிச்சையாக சோதனை நடத்தியுள்ளதாகவும், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கூறியிருந்தார்.

நேற்று 5-வது நாளாக நடைபெற்ற சோதனை முடிந்ததும், ஜெயா டிவி நிர்வாக செயல் அதிகாரி விவேக்கை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், விவேக்கும், கிருஷ்ண பிரியாவும் கைது செய்யப்படலாம் என்று பாஜக பிரமுகரும், பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'பிரேக்கிங் நியூஸ், தமிழகத்தில் அடுத்த கைது' என்று கூறி, 'கிசுகிசு பாணியில் வி....க் & கி...ண...பி..யா' என்று கூறியுள்ளார். அதற்காக அனைத்து ஊடங்களும் தயாராக இருங்கள் என்று சிம்பல் போட்டு பதிவிட்டுள்ளார்.
GET UPDATES