இன்றைய தினம் அகதிகளின் அவலத்தை ஆழ உழுத பிரதமர்..!!

5 days agoமியன்மாரின் ராக்கின் மாநிலத்திலுள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் அவநிலை குறித்து மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ”மியன்மாரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பில் நாம் அக்கறை கொண்டுள்ளோம்.

உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு கனடா எப்போதும் ஆதரவாக செயற்படும். இதுவே உலக நாடுகளுடன் நாம் இணைந்து செயற்படும் முறை.

ராக்கின் மக்கள் எதிர்நோக்கும் அவலநிலையை கண்டு, கனடா மாத்திரமன்றி பல உலக நாடுகளும் கவலையடைந்துள்ளன” என்றார்.
GET UPDATES