மோட்டார் சைக்கிள் விபத்து! விசுவமடு இளைஞர் மரணம்!

5 days agoமுல்லைத்தீவு மாவட்டம், விசுவமடுவில் இன்று இரவு நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.

ரெட்பானா, இளங்கோபுரத்தில் இருசக்கர உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞனே உயிரிழந்தவராவார். விபத்துக்கு குறித்து மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

GET UPDATES