எப்படியும் எண்ணிக்கை அதிகமாகலாம்... திடீர் அச்சத்தின் காரணம்..?

5 days agoஅமெரிக்காவின் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கப்படல் மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தோருக்கான தற்காலிக பாதுகாப்பு நீக்கப்படல் என்பவற்றால், கனடாவுக்குள் வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோருக்கான தற்காலிய தடைகள் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அவ்வாறான சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான சமிக்ஞைகளை அமெரிக்க நிர்வாகம் காட்டியுள்ள நிலையில், அதன் மூலமாக கனடாவுக்குள் அகதி தஞ்சம் கோரிவருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அது தவிர மத்திய அமெரிக்க மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு ஏற்படுகளையும் அமெரிக்கா நீக்கவுள்ளதாக எதிர்பார்ககப்படும் நிலையில், அதன் காரணமாகவும் பெருமளவு தஞ்சக் கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் வரக்கூடும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறக தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சம் ஹெய்ட்டிய மற்றும் மத்திய அமெரிக்க நாட்டவர்கள், அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தல் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேர்ந்ததால், அவர்கள் கனடாவிற்குள் பெருமளவில் நுழைய முயற்சிக்க கூடும் என்று கூறப்படுகிறது.
GET UPDATES