கரையொதுங்கிய மனிதனின் கால் பாதம்: ஒன்ராறியோவில் அதிர்ச்சி..!!

5 days agoஒன்ராறியோ கொட்டேஜ் கண்ட்ரி கடற்கரைப் பகுதியில் மனித கால் பாதம் ஒன்று கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரொரன்ரோவில் இருந்து வடமேற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்று்ளள நிலையில், அங்கு இது குறித்து ஒருவித பதற்ற நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒன்ராறியோவின் மியாஃபோர்ட பகுதியில், ஜோர்ஜியன் பே கடற்கரைப் பகுதியில், இந்த மாத ஆரம்பத்தில் கரையொதுங்கிய பாதம் மனிதருடையது என்பதனை தற்போது ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த அந்த பாதத்தினை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், அது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவிலலை.

அது தொடர்பில் தடயவியல் நிபுணர்களும், உள்ளூர் மரண விசாரணை அதிகாரிகளும் தொடர்ச்சியான விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

           
GET UPDATES