துன்புறுத்தல்களுக்கு இலக்கான இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

5 days agoமத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்த இலங்கையை சேர்ந்த 27 பணிப்பெண்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

நீதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடு திரும்பியவர்களில் இருவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பியவர்கள் குவைட் நாட்டில் பணிப்பெண்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், மேலும் 85 இலங்கை பணிப்பெண்கள் அந்நாட்டில் உள்ள பாதுகாப்பு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GET UPDATES