ஓய்வாக இருப்பதற்காகவே தூதுவர் சேவைகளில் இணைந்து கொள்கின்றனர்

5 days agoஓய்வு பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே பலர் தூதுவர் சேவையில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தற்பொழுது ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ள பலர் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கும் நோக்கிலேயேயாகும். இதனால் ராஜதந்திர சேவைக்கு பலத்த போட்டி உருவாகியுள்ளது.

கடந்த தசாப்த காலமாக ராஜதந்திர சேவையில் இணைந்து கொண்டவர்கள் மறைந்த குணபால மலலசேகரவைப் போன்று அர்ப்பணிப்புடன் ராஜதந்திர சேவையில் பணியாற்றியிருந்தால், இலங்கை மிகவும் முன்னேற்றமடைந்த நாடாக மாறியிருக்கும்.

பல்வேறு பலம்பொருந்திய நாடுகளிடமிருந்து பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் மலலசேகரவின் பண்புகளை பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ராஜதந்திர சேவையில் கீர்த்திமிக்க பெயரையுடைய குணபால மலலசேகரவின் நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

GET UPDATES