ஆட்கடத்தலை தடுக்க வழுவான சட்டம் தேவை!

5 days agoஇலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு வலுவான சட்டம் தேவைப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்றைய தினம்(14) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு வலுவான சட்டம் தேவைப்படுகிறது.

இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவு தயாரிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

GET UPDATES