யாழ். கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே!

5 days agoயாழ். மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கவுள்ளது.

குறிப்பாக வடபகுதி மயிலிட்டி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நோர்வே 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளது.

இந்த செயற்பாட்டின் கீழ் இலங்கைக்கு நோர்வே அரசாங்கம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்திக்கு சந்தை அடிப்படையிலான கால்நடை வளர்ப்புக்கு உதவி செய்யவுள்ளது. இதன்மூலம் 550 குடும்பங்கள் யாழ். மாவட்டத்தில் நேரடியாக நன்மையடையவுள்ளனர்.

GET UPDATES