ரோஹிங்கியா நெருக்கடியை தீர்க்க உதவ தயார்: கனடா

5 days agoமியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க உதவுவதற்கு தயாராகவிருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தென்கிழக்கு ஆசிய தலைவர்களுடனான உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து ஆராயும் வகையில் விசேட தூதுவர் ஒருவரை நாம் நியமித்துள்ளோம்.

அதன்படி, இந்நெருக்கடியை தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியில் எவ்வாறு உதவலாம் என்ற வகையில் ஆராயப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு தீர்வு காண கனடா, மனிதாபிமான ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உதவ தயாராக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்போதான இனப்படுகொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மியன்மார் ராணுவத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து பாதுகாப்பு படையினர் இன்று அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES