துடுப்பாட்ட வீரராக விளையாட ஏஞ்சலோ மெத்தியூஸ் வாய்ப்பு!

5 days agoஇலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 16ஆம் திகதி கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, ஏஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடுவார் என இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர், ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏஞ்சலோ மெத்தியூஸ், தற்காலிகமாக போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது, உபாதை குணமடைந்துள்ள போதிலும் அவரால் களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து துடுப்பாட்ட வீரராக மாத்திரம் களமிறங்கவுள்ளார்.

அவருக்கு பதிலாக தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, ஆகியோர் பந்து வீச்சாளர்களாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES