இலங்கையை வீழ்த்த இந்தியா தயார்!

5 days agoஇலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் கொல்கத்தாவை சென்றடைந்துள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 13.11 (திங்கட்கிழமை) கொல்கத்தாவை சென்றடைந்துள்ளதாகவும் நேற்று காலை முதல் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உமேஷ் யாதவ், தவான் உள்பட சில வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே கொல்கத்தாவை சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ரி-ருவன்ரி கிரிக்கெட் போட்டி கடந்த 7ஆம் திகதி திருவனந்தபுரத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் கொல்கத்தா சென்றடைந்துள்ளனர்.

GET UPDATES