துபாயில் ‘மெர்சல்’ வெற்றிக் கொண்டாட்டம்

5 days agoஉலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் துபாயிலுள்ள பாலம் தீவில் கொண்டாடியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ‘மெர்சல்’ நாயகன் விஜய், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்னு ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான, விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் 25 நாட்களையும் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

தமிழில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியையும் தாண்டியுள்ளது. இதேவேளை, ‘அதிரிந்தி’ என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘மெர்சல்’ திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய நடிகர்களில் அதிக வசூல் குவித்த நடிகர் என்ற பெருமைiயும் விஜய் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES