இலங்கையில் புதிய LED மின்குமிழ்கள் அறிமுகம்!

5 days agoஇலங்கை சந்தையில் புதிய LED மின்குமிழ்களை களனி கேபில்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபில்கள் உற்பத்தியில் 50 வருடங்களுக்கு மேலான கீர்த்தி நாமத்தை களனி கேபில்ஸ் பி.எல்.சி. கட்டியெழுப்பியுள்ளதுடன், காலப்போக்கில் களனி LED குமிழ்கள் மற்றும் ஒளியூட்டல் தீர்வுகள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தது.

களனி இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபில்களை போன்று, களனி ஒளியூட்டல் தயாரிப்புகளும் சந்தையில் நம்பிக்கையை பெற்றுள்ளன.

இலங்கையர்கள் தற்போது களனி LED மின்குமிழ்களை 3 Watt முதல் 11 Watt வரை கொள்வனவு செய்யலாம்.

இவை Daylight மற்றும் Warm light ஆகிய தெரிவுகளில் காணப்படுகின்றன. Screw மற்றும் Pin தெரிவுகளில் இரு வருட உத்தரவாதங்களுடன் கொள்வனவு செய்யலாம்.

புதிய களனி LED மின்குமிழ்கள் மின்சாரத்தை 85 சதவீதம் வரை சேமிக்கக்கூடியன,15 வருட கால ஆயுட்காலத்தையும் கொண்டுள்ளன.

நாட்டின் மக்களுக்கு தமது மின்சார கட்டணப்பட்டியல் அதிகரித்துச்செல்வதை கட்டுப்படுத்திக்கொள்ள இது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

GET UPDATES