அண்ணனுடன் இணைந்து நடிக்க தயார்

5 days agoநல்ல கதை அமைந்தால் அண்ணனுடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”சினிமாவில் கதைதான் முக்கியம். எனவே, கதைகளை தெரிவுசெய்வதில் நான் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறேன்.

அந்தவகையிலேயே தற்போது நடித்துவரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தையும் தெரிவுசெய்தேன். ஒரு பொலிஸ் அதிகாரியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் இதன் கதை அமைந்துள்ளது.

உண்மை சம்பவமொன்றை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

GET UPDATES