சிறையில் சசிகலாவிற்கு வழங்கப்படும் சலுகைகள் உண்மை!

5 days agoசசிகலாவிற்கு சிறையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உண்மை என, விசேட ஆய்வுக்குழுவின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்ய நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு, நேற்று (செவ்வாய்கிழமை) தமது ஆய்வின் அறிக்கையை தாக்கல் செய்தது.

குறித்த அறிக்கையில், சிறையில் நடந்த முறைகேடுகள் உண்மை எனவும், சசிகலா தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக வெளியான வீடியோ தகவல்களை அடுத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES