தற்கொலைக்கு முயன்ற இந்திய வீரரின் வாக்குமூலம்

5 days agoஉள்ளூர் அணியில் இடம் கிடைக்காமையால் தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த கால தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உத்தரபிரதேச மாநில 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக நான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனாலும் அணித் தெரிவின் போது, என்னை அணியில் சேர்க்கவில்லை. இதன்காரணமாக மனமுடைந்த நிலையில், கிரிக்கெட் வாழ்க்கையை இத்துடன் முடித்து விடலாம் என நினைத்தேன்.

மேலும், நான் விரக்தி அடைந்து கோபத்தில் தற்கொலைக்கும் முயற்சி செய்து இருக்கின்றேன். உண்மையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும். அப்படியே எனக்கும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டது.” என குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

GET UPDATES