பலாலியில் உள்ள உணவகத்தில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்!

5 days agoயாழ். பலாலி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றின் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினர் உணவகத்திலுள்ள பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த ஊழியர்களையும் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் மூன்று பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

GET UPDATES