வழமைக்கு மாறாக மட்டக்களப்பில் அதிக பனி மூட்டம்!

5 days agoவழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்து பனி மூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, படுவான்கரைப் பிரதேசம், உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பனிமூட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

GET UPDATES