சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

5 days agoதிருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளைநாவல் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளதோடு, அவர்களின் இரண்டு உழவு இயந்திரங்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

GET UPDATES