கூட்டமைப்பு குழப்பத்துக்கு தீர்வுகாண பிரதமர் முயற்சி!

2 weeks agoஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இதர விடயங்களுக்கு கூட்டமைப்பின் ஒற்றுமைத் தன்மை அவசியம் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று புளொட் தலைவர் சித்தார்தனுடனும் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார். அதன்போது விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சித்தார்தனுக்கு பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறிருப்பினும், பிரதமரின் குறித்த முயற்சிகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தன்னுடன் பிரதமர் இதுதொடர்பில் எதுவும் கலந்துரையாடவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆதவனுக்கு தெரிவித்துள்ளார்.

GET UPDATES