இலங்கை அணியை கண்டு வியந்து போன கோஹ்லி!

2 weeks agoஇலங்கை அணி ஒரு இலக்கை நோக்கி செல்கின்றமை மற்றும் அவர்களின் நம்பிக்கையை நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அவதானித்தாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பின், நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்த டெஸ்ட் தொடர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு மற்றும் எனது அணி வீரர்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எவ்விதமான சவால்களையும் எதிர்க்கொள்ள முடியும்.

நான் அணியின் தலைமைப் பதவியை பெற்றிராத போது, அணியினுள் காணப்படும் சிரமங்கள் மற்றும் தலைவர் ஒருவர் முகங்கொடுக்க வேண்டிய சவால்களை அறிந்திருக்க வில்லை.

ரோஹித் சர்மா, மத்திய தர வரிசை வீரர் என்ற வகையில் போட்டியை மாற்றக்கூடியவர்.

அவரின் துடுப்பாட்ட முறை தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அனைத்து வீரர்களுக்கும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் தமது திறமையை வெளிப்படுத்த முடியாது.

இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதி நாளில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்கிய போதும், எமது அணி வீரர்களுக்கு விக்கெட்டுக்களை கைப்பற்ற எவ்வித வாய்ப்புக்களையும் வழங்கவில்லை” என கூறினார்.

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES