சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயரதிகாரி இலங்கை விஜயம்!

2 weeks agoஉலகின் மிகப்பெரிய ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச தொடர்புத்துறை உதவி அமைச்சரான வாங் யாஜூன், அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை இந்த விஜயம் அமையவுள்ளதாக, கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிமுதல் 24ஆம் திகதிவரை பீஜிங்கில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை விஜயத்தின் போது வாங் யாஜூன் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் சோசலிஸம் தொடர்பான சிந்தனையை உள்வாங்கும் வகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் யாப்பு திருத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

96 வருட பழைமை வாய்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியானது, 89 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சியாகும். இதன் தேசிய மாநாடு, ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GET UPDATES