விராட் கோஹ்லி அசத்தல் சாதனை!

2 weeks agoஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில், புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளின் தலைவர்களில் அதிக இரட்டை சதங்களை பெற்ற அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கோஹ்லி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இரட்டை சதங்களை பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கோஹ்லி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 213 ஓட்டங்களும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 243 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டார்.

அத்தோடு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், டெஸ்ட் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

நடப்பு வருடத்தில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி, 11 சதங்கள் அடங்களாக 2818 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GET UPDATES