விரைவில் சட்ட வரைவு..? கையில் ஆயுதத்தை எடுத்தால் அவ்வளவு தான்..!!

2 weeks agoநகர பகுதிகளில் துப்பாக்கி உபயோகிப்பதற்கும் தடை விதிப்பதற்கும் பெரும்பாலான கனேடிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 10 முதல் 30ஆம் திகதி வரை கனேடிய செய்தி ஊடகம் ஒன்று பொது மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுமார் 2,287 கனடிய மக்களிடம் நடத்தப்பட்ட குறித்த கருத்துக் கணிப்பில், கனடாவின், நகர பகுதிகளில் துப்பாக்கி உபயோகிப்பதற்கு தடை விதிப்பதற்கும், அதில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

அந்த கேள்விகளுக்கு, 69 சதவீத மக்கள் தடை விதிக்க சம்மதம் தெரிவிப்பதாக பதிலளித்திருந்தனர். அதிகபட்சமாக கியூபெக் மாகாணத்தில் 76 சதவீத மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆல்பர்ட்டா மாகாணத்தில் குறைந்தபட்சமாக 48 சதவீத வாக்குகள் பதிவானது. சில அரசியல் கட்சிகளும் இந்த கருத்துக் கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கனேடிய அரசு, துப்பாக்கி மற்றும் கடுமையான ஆயுதங்களை நகர பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட வரைவுகளை விரைவில் கொண்டுவர உள்ளதாக அறிவித்த
GET UPDATES