ரொறன்ரோ பெண் உயிரிழப்பு.. சாட்சியங்களை அழைக்கும் பொலிசார்..!!

2 weeks agoரொறன்ரோவின் ஸ்கார்பரோ மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பொன்றின் பிரகாரம் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணொருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், அவர் பின்னர் உயிரிழந்ததுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்களை முன்வந்து சாட்சியங்களை பதிவு செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
GET UPDATES