விளம்பரம் வெளியானது..இனியாவது விபரீதம் குறையுமா..??

2 weeks agoபோதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை சித்தரிக்கும் வகையிலான விளம்பரங்களை பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் வெளியிடவுள்ளார்.

குறித்த விளம்பரங்கள் தொலைக்காட்சி, ஒன்லைன் மற்றும் சினிமா திரையரங்குகளில் ஒளிப்பரப்படவுள்ளன.

அத்தோடு வானொலி, விளம்பர பலகைகள் மற்றும் பொது இடங்களிலும் தோன்றவுள்ளன.

போதைப் பொருட்களை பாவித்ததன் பின்னர், வாகனத்தை செலுத்தி பேரழிவு மிக்க விபத்துகள் உருவாகும் விதத்தினை குறித்த காணொளி தெளிவுபடுத்துகின்றது.

குறிப்பாக இளைஞர்கள் வாகனம் செலுத்தும் போது போதை மருந்துகள் பாவிப்பதால் ஏற்படும் உண்மையான ஆபத்துக்கள் குறித்து அறிந்திருப்பது அவசியமென, ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தாய்மார் குழு’ என்ற தங்களது விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
GET UPDATES