கைக்குழந்தையை கடத்த முயற்சி..? கழுகு பார்வையில் களமிறங்கும் ரொரன்ரோ காவல் துறை..!!

2 weeks ago



ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் குழந்தையை கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யங் வீதி மற்றும் லோரன்ஸ் அவனியூ ஈஸற் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அது குறித்த காணொளிப் பதிவினையும் வெளியிட்டுள்ளனர்.

29 வயதான பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையுடன் அவ்விடத்தில் நின்றிருந்த வேளையில், அவரை அணுகிய இனந்தெரியாத  ஒருவர், ஏதோ ஓரிடத்திற்கு செல்வதற்கான பாதை தொடர்பில் விசாரித்துள்ளார்.

அதன் போது அவரது குழந்தையை தன்னிடம் தருமாறு அந்த சந்தேக நபர் கோரியதாகவும், தாயார் மறுத்துவிட்ட நிலையில், தாயாரின் கையிலிருந்து குழந்தையை பறித்துக் கொண்டு தப்பியோட முனைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் தயார் தனது குழந்தையை விடாது கடுமையாக போராடிய வேளையில், தாயார் மீது அந்த நபர் கடுமையாக தாக்கியதாகவும், அப்போதும் தனது முயற்சி கைகூடாத நிலையில் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த சந்தேக நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், சுமார் ஐந்து அடி ஏழு அங்குல உயரமுள்ள அவர் சுமார் 130 இறாத்தல் எடை கொண்டவராக இருப்பார் எனவும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அடையாளம் வெளியிட்டு, அவரது நிழற்படத்தினை பிரசுரித்துள்ள காவல்துறையினர், அவரை அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








GET UPDATES