எச்சரிக்கை..!! எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்..!! ஒரே பகுதியில் 160 வீடு உடைப்புச் சம்பவம்..!

2 weeks agoநோர்த் யோர்க்கின் பிரைடில் பாத் பகுதியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இது வரையான காலப்பகுதியில் சுமார் 160 வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான வீடு உடைப்புச் சம்பவங்கள் குறித்த இந்த பகுதியில், மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அச்சத்தையும் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நெடுங்சாலை 401, லெஸ்லி வீதி, லோறன்ஸ் அவனியூ, பேவியூ அவனியூ ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ள பகுதியிலேயே இவ்வாறான வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இவ்வாறான வீடு உடைப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், அவற்றை தடுத்து நிறுத்துவத்றகு சமூகமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ள து.

குறிப்பாக வீடுகளில் உள்ளவர்க்ள் வீடுகளை விட்டு வெளியேறும் நேரம், மீண்டும் வீட்டுக்கு வரும் நேரம், உறங்கும் நேரம் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனித்து, கணிப்பிட்டு திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
GET UPDATES