ஆசனப் பங்கீட்டிற்காக பிரிந்து செல்வது துரதிஷ்டமானது!

2 weeks ago”தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புனிதமான பயணத்தை மேற்கொண்டு வந்தது.

எனினும், ஆசனப் பங்கீட்டிற்காக பிரிந்துசெல்லும் நிலை ஏற்பட்டமை துரதிஷ்டமானது. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய பங்காளிக் கட்சிகள் பாரம்பரிய கட்டமைப்புக்களை கொண்ட கட்சிகளாக இல்லாமல் போராளிகளாக, இயக்கங்களாக இருந்து கட்சிகளாக மாறியவர்கள்.

இதற்காக அவர்களை புறக்கணித்துவிட முடியாது, அவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெறுமனே ஆசனப் பங்கீடு என்ற காரணத்திற்காக பிரிந்து செல்லக் கூடாது என்று பங்காளிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள சுமந்திரன் தொடர்ந்தும் ஒன்றாக பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், கூட்டமைப்பிலிலிருந்து வெளியேறுவதில் உறுதியாக நிற்பவர்களை தடுக்க முடியாதென சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

GET UPDATES