இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை..!!

2 weeks agoமதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செல்படுத்தியதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை விருது மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு வழங்கப்பட்டது.

இதனை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கலெக்டருக்கு வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த நிதியாண்டில் இதர துறைகள் மூலம் ரூ. 35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 14 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனபதிபதி விருது கிடைத்த தன் மூலம் மதுரை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இன்னும் 3 மாதத்தில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்.

இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி விருது கிடைத்ததை மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு மேலும் ஊக்கமாக கருதுகிறேன்.

 மதுரையில் மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மதுரைக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
GET UPDATES