அப்பளம் போல நொறுங்கிய பிரபல இயக்குநரின் கார்.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!!!

2 weeks agoசென்னை செம்மஞ்சேரியில் இயக்குநர் கவுதம் மேனன் வந்த சொகுசுக் கார் மீது டிப்பர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னலே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கவுதம் மேனன்.

இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.தற்போது நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், மகாபலிபுரத்தில் இருந்து சொகுசுக் கார் மூலம் இயக்குநர் கவுதம் மேனன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது செம்மஞ்சேரி அருகே வந்த போது மணல் பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கவுதம் மேனன் வந்த சொகுசுக் கார் மோதியது.

இந்த விபத்தில் கவுதம் மேனனின் சொகுசுக் கார் அப்பளம் போல நொறுங்கியது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ள கார் என்பதால் கவுதம் மேனன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல இயக்குநர் கவுதம் மேனன் விபத்தில் சிக்கிய சம்பவம் தமிழ்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GET UPDATES