தேர்தல்கள் ஆணையகத்தில் முக்கிய சந்திப்பு!

2 weeks agoஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கும், பொலிஸாருக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

தேர்தல் ஆணையகத்தில், நடைபெற்ற குறித்த சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் காணப்படவேண்டிய பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலானது எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்விடயங்கள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் வாரத்தில் பொலிஸ் திணைக்களத்தின் மூலம் அறிக்கையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GET UPDATES