அதிரடிப்படைக்கும் அஞ்சாமல் முன்னேறி செல்லும் பெண்கள், மீனவர்கள் : குமரியில் பதற்றம்..!!

2 weeks agoஒக்கி புயல் பாதிப்பால் தமிழக மீனவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கியிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மந்தமாக செயல்படுவதாகவும், உரிய முறையில் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை எனவும் குமரி மாவட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த கேரள மீனவர்களுக்கு 25 லட்ச ரூபாயும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் வழங்குவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்ளை நேரிலும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.ஆனால், தமிழக அரசோ இறந்தவர்களுக்கு 4 லட்சம் மட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுவரை தமிழக முதல்வர் குமரிக்கு செல்லவேயில்லை.இதற்கு கண்டனம் தெரிவித்தும் மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் மீணவர்கள், பெண்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரணிக்கு போலீஸார் அனுமதி கொடுக்காத நிலையில், அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களையும் மீறி தொடர்ந்து மீனவர்கள், பெண்கள் முன்னேறி செல்கின்றனர்.

அவர்கள் குமரியில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல்வர் வர வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

அவ்வாறு வரவில்லை என்றால், அனைவரும் நடந்தே கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசவிருப்பதாகவும், கன்னியாகுமரியை கேரளாவுடன் இணைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
GET UPDATES