நோயால் அவதிப்பட்ட தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள் ..!!

2 weeks agoதமிழகத்தில் சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 90). நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இந்த நிலையில் ஒரு காலி இடத்தில் முதியவர் ஒருவர் பிணம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது மகள் கமலாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொன்று புதைக்கப்பட்ட பழனிசாமியின் மகள் கமலா அரிசிபாளையம் மாணிக்கம் தெருவில் உள்ள மஞ்சள் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

அவரது தந்தை பழனிசாமிக்கு வயதானதால் உடலில் புண்கள் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். இதனை கமலா சரியாக கவனிக்கவில்லை.

பழனிசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளப்பட்டியில் உள்ள கழிப்பிடம் அருகே படுத்துக் கொண்டு ஆங்காங்கு கிடைக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

சிலநேரங்களில் பசியால் மகளின் வீட்டிற்கும் செல்வார்.இதனால் மன வேதனையடைந்த கமலா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அவரை கருணை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2-ந்தேதி சண்முகம், பழனிசாமியை தூக்கி சென்று அந்த கல் மாவு மில்லில் உள்ள ஒரு இருட்டறையில் போட்டார். மறுநாள் தவழ்ந்த படி வெளியே செல்ல முயன்ற பழனிசாமி முகத்தில் சண்முகம் கல்மாவு மூட்டையை தூக்கி போட்டார்.

இதில் மூச்சு திணறி பழனிசாமி இறந்தார். முதியவரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
GET UPDATES