கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு - வைரலாகும் காட்சி..!!

2 weeks agoராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உறைய வைக்கிறது.

அம்மாநிலத்தில் கூலி வேலை செய்யும் முஸ்லீம் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கினார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்கிறார்.

அவர் மீது ஆயிலை ஊற்றி அடித்து உயிருடன் எரித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அதன் அடிப்படையில் ஷாபு லால் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வீடியோவை பார்த்த அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் உள்துறை மந்திரி குலாப்சந்த் கட்டாரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்படும் என அவர் உறுதியளித்தார்.GET UPDATES