விழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!

5 months ago“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” கனடாவில் நாளை ஜூலை 29 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் ரொரன்டோ மார்க்கம் பெயார் கிறவுண்டில் இடம் பெற இருக்கின்றது.

இதில் முக்கிய பிரபலமாக பாடும் நிலா SP,.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு பாட இருக்கிறார்.

இவர் 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.

இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

மேலும் அறிவிக்கப்பட்டதன் உறுதிமொழிக்கிணங்க சகல பாடகர்கள், வாத்தியக்கலைனார்கள் மற்றும் நடிகர்கள் சகலரும் Torontoவில் கால் பதித்துள்ளார்கள்.

காலை பத்துமணிமுதல் Markham Fairgrounds திறந்துவைக்கப்படவுள்ளது. ஏராளமான வர்த்தக சாவடிகள், உணவு சாவடிகள், தாயக உணவு சாவடிகள், ஐஸ் கிறீம் சாவடிகள், சிறுவர்களுக்கான களியாட்ட அமைவிடங்கள் என ஏராளமான சந்தோசம் கலந்த இன்பத்தினை வழங்கக்கூடிய வகையில் தயார்படுத்தல் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும் பாடும் நிலா பாலசுப்ரமணியம் (SPB), கானா பாலா, நடிகை ஐஸ்வர்யா, பாடகர் சத்யபிரகாஷ், நடிகை கீர்த்தனா ,மலேசியா பாடகர் வில்லியம், சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா, பாடகர் முகேஷ், பாடகி வந்தனாஸ்ரீ, மாப்பிளை சரவணன் மீனாட்சி, நடிகர் விதார்த், பாடகி சுர்முகி, பாடகர் ஷ்ரவன், பாடகர் நடிகர் ஷியாம் என ஏராளமான தமிழ்நாட்டு கலைனர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

நிகழ்ச்சிகள் யாவும் சரியான நேரத்திற்கு ஆரம்பமாகும். கோடைகாலத்தின் மிகப்பெரிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வாருங்கள். சூரியபகவானின் முழுத்தரிசனம். இன்பம், மகிழ்ச்சி, சந்தோசம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
GET UPDATES