போக்கு காட்டும் போதை மருந்து கலாச்சாரம்… டோலிவுட்டை தாண்டி கோலிவுட் பக்கமும் எட்டிப் பர்க்கிறதாமே..!!

4 months ago

டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் போதை மருந்து குறித்த விசாரணை நடக்கலாம் என்று தகவல்கள் பரபரக்கின்றன.

அக்கட ஆந்திர தேசத்தில் சில மாதங்களாக போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் சிக்கி டோலிவுட் நட்சத்திரங்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், இதற்காக வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் பிரபல நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜரான ரோனி கூட இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டோலிவுட்டைப் போலவே கோலிவுட் நட்சத்திரங்கள் மீதும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் கோலிவுட்டிலும் சோதனை நடைபெறலாம் என்கிறார்கள்.
GET UPDATES