முதுகு வலியால் முடங்கிப்போது பந்துவீச்சு... ரங்கனா ஹெராத்துக்கு ஓய்வு: 3-ஆவது ஆட்டமும் சிக்கலில் தானா..?

4 months agoசுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் முதுகு வலி காரணமாக, இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஹெராத்துக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. எனினும், அதிலிருந்து மீண்டு வந்த அவர் 2-ஆவது போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில், இந்தத் தொடரை ஏற்கெனவே இந்தியா வசம் இழந்துவிட்ட நிலையில், அடுத்து வரும் முக்கிய தொடர்களுக்கு முன்பாக ரங்கனா ஹெராத்துக்கு தற்போது ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில், ரங்கனா ஹெராத்துக்கு பதிலாக மலின்டா புஷ்பகுமாரா இலங்கையின் சுழற்பந்துவீச்சுக்கு தலைமை வகிக்க உள்ளார்.

இதனிடையே, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக, அணியின் முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னநாயகே புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்பாக சம்பக ராமநாயகே அந்தப் பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
GET UPDATES