எதிரியே ஆனாலும் துன்பத்தில் இருப்பவனுக்கு உதவும் குணம்… அதுதான் தமிழன்..!!

4 months agoஇந்தியாவின் மீது இன்னும் இரண்டு வாரத்தில் போர் தொடுப்பேன் என்று சீனா அறிவித்துள்ள நிலையில் அங்கு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலையில் தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.

இதன் காரணமாக மக்கள் தெருக்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர். குன்கையுவான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அளவிடும் ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவுக்கு பதிவாகி இருக்கிறது.

5-ஐ தாண்டினாலே தாக்கம் அதிகமாக இருக்கும், 7 என்பதால் நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.

கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்கள் கீழ விழுந்து நொறுங்கியுள்ளன.

இதற்கு முன்னர் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின்போது சுமார் 70000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாவில்லை. மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

இது தொடர்பான செய்தி நேற்று சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது. மற்ற மொழி தளங்களில் சீனாவை வசைபாடி கருத்துகள் பதிவிட்ட நிலையில், தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனாவின் நிலையை நினைத்து மனம் உருகி வருந்துகின்றனர்.

என்னதான் சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் முடிவில் இருந்தாலும், மக்கள் மன நிலை என்றும் அமைதி போக்கை தான் விரும்பும்.

அன்றைக்கே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நெறியை உலகிற்கு போதித்த இனம் நாம். திரைப்படத்தில் சொல்லவது போல மட்டும் அல்ல, நிஜத்திலும் இந்திய வட கோடி முனை காஷ்மீரில் ஒரு துயரம் என்றால், தென்கோடி முனை குமரியில் கண்ணீர் சிந்தும் மக்கள் இருக்கின்றனர்.

சகோதரத்துவத்தை விரும்பும் மக்கள் வாழும் நாட்டில், மண்ணாசைக்காக ஒரு இன மக்களின் ஓசையையே அடக்குவதுதான் அரசின் செயல்பாடா..?

இந்த விடயத்தில் நாம் சீனாவிற்கு உதவுவதன் மூலம் ஒரு இணக்கமான போக்கு கிடைக்காதா என்ன..?
GET UPDATES