ஸ்டைலிஷ் மகேஷ்பாபு..! மிரட்டல் எஸ்.ஜே.சூர்யா..! வெளியானது ‘ஸ்பைடர்’ டீசர்

4 months agoஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படத்தின் டீசர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.

‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கே உரித்தான ஸ்டைலிஷான தோற்றத்தில் மகேஷ்பாபு அசத்தியிருக்கிறார்.

பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா ‘ஸ்பைடர்’ படத்தில் மிரட்டலான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

‘ஸ்பைடர்’ படம் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் மகேஷ்பாபு பேசி நடித்திருப்பது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில் ‘ஸ்பைடர்’ படம் ஒரு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
GET UPDATES